93 பில்லியன் யூரோ மதிப்பில் பதிலடி நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்!!

24 ஆடி 2025 வியாழன் 22:04 | பார்வைகள் : 1566
அமெரிக்காவுடன் நடைபெறும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், 93 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் திங்கள் கிழமை (ஜூலை 24) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஆகஸ்ட் 7 முதல் அமுலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் தயார் செய்துள்ள பட்டியலில், அமெரிக்காவில் இருந்து வரும் மதுபானம், கார்கள், விமானங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இடம் பெற்றுள்ளன. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது 30% வரி விதிப்பதாக மிரட்டியுள்ளது. இதற்கான பதிலடி நடவடிக்கையாக இந்த வரி விதிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்புநாடுகள் , அமெரிக்காவின் வாஷிங்டனுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம், 15% அடிப்படை வரி மற்றும் சில துறைகளுக்கான விலக்கு வழங்கும் அமெரிக்காவின் புதிய முன்மொழிவை ஐரோப்பிய நாடுகள் பரிசீலித்து வருகின்றன என தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.