Clichyஇல் அகதி ஒருவர் நதியில் மூழ்கி உயிரிழப்பு!!!

24 ஆடி 2025 வியாழன் 18:30 | பார்வைகள் : 1935
பாரிஸ் அருகே உள்ள Clichyஇல், 34 வயதான ஆப்கான் தஞ்சம் நாடி வந்தவர் சீனில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவர் தங்கியிருந்த அவசர தங்குமிடம் நதிக்கரைக்கு அருகிலிருந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் நீரில் மிதந்த அவரை மீட்டு இதய அழுத்தம் செய்தும், உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாகச் சொல்கின்றனர், ஆனால் தற்கொலை என்று உறுதி செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. உலக சுகாதார நிறுவனம் அகதிகள் மற்றும் குடிபெயர்ந்தவர்களிடம் மனநல பிரச்சனைகள் மற்றும் தற்கொலைக்கு அதிக ஆபத்து இருப்பதாக எச்சரிக்கிறது.
இதற்குப் பதிலளிக்க பரிஸில் உள்ள மனநல மருத்துவமனையில், 2021 முதல் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது, குடிபெயர்வு பாதையால் ஏற்படும் மனஅழுத்தங்களை குறைக்கவே இது உருவாக்கப்பட்டுள்ளது.