வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் இருந்து 100 பில்லியன் - பிரதமர் புது திட்டம்!!

24 ஆடி 2025 வியாழன் 18:30 | பார்வைகள் : 2687
பிரான்சுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் ஆண்டுக்கு 100 பில்லியன் யூரோக்களை பிரான்சில் செலவிடச் செய்ய வைக்கும் புதிய திட்டம் ஒன்று தொடர்பில் பிரதமர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
2030 ஆம் ஆண்டை இலக்குவைத்து ஆண்டுக்கு 100 பில்லியன் யூரோக்களை பிரான்சில் செலவிட வைக்கும் அளவு ஒபயணிகளை கவரவேண்டும் என்பதே திட்டமாகும். தற்போது 70 பில்லியன் யூரோக்கள் ஆண்டுக்கு வெளிநாட்டு பயணிகள் செலவிடுகின்றனர்.
சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தி, மேம்படுத்துவது தொடர்பில் பல்வேறு திட்டங்களை கொண்டுவர உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் மொத்த GDP இல் 8% சதவீதத்தை சுற்றுலாத்துறை கொண்டுள்ளது. 2 பில்லியன் பேருக்கான வேலைவாய்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், வேலை வாய்ப்பை உயர்த்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.