ஜி வி பிரகாஷுக்கு வில்லனாக மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ்...
24 ஆடி 2025 வியாழன் 19:06 | பார்வைகள் : 1644
இயக்குனர் கதிர் இயக்கிய, காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ், உடனடியாக சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் மாறினார். அதையடுத்து அவருக்கு பல படங்கள் புக் ஆகின. ஆனால் அவர் விஜய் அஜித் போல ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்காமல் விட்டார்.
இதனால் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆக பல படங்கள் பிளாப் ஆகின. இதனால் ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் வர ஆரம்பித்து கடைசியில் வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால் அதிருப்தியான அப்பாஸ் சில விளம்பர படங்களில் தலைகாட்டி விட்டு காணாமல் போனார்.
கடந்த 10 ஆண்டுகளாக நியுசிலாந்தில் செட்டில் ஆகி வாழ்ந்து வந்த அப்பாஸ், தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க உள்ளதார். களவாணி மற்றும் வாகை சூடவா ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற சற்குணம் தற்போது துஷாராவை வைத்து ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிறார். இந்த இணையத் தொடரில் அப்பாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து மரிய ராஜா இளஞ்செழியன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் ஜி வி பிரகாஷுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan