அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 9 ?

24 ஆடி 2025 வியாழன் 18:06 | பார்வைகள் : 885
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சி இந்தியாவில் முதன்முதலில் இந்தியில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு முதன்முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் கமல்ஹாசன் தொகுப்பாளராக களமிறங்கினார். இதனால் முதல் சீசனே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி அந்த சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ்வை விட, பாதியில் வெளியேறிய ஓவியாவுக்கு தான் மிகப்பெரிய ரசிகர் படையே உருவானது. அவருக்காக ட்விட்டரில் ஆர்மியெல்லாம் தொடங்கினார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனே வேறலெவல் ஹிட் அடித்ததால் அந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். இதன் இரண்டாவது சீசனில் ரித்விகா டைட்டில் வின்னர் ஆனார். அடுத்ததாக முகென் ராவ் மூன்றாவது சீசனில் டைட்டிலை தட்டிதூக்கினார். நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும், ஏழாவது சீசனில் அர்ச்சனாவும், கடைசியாக நடந்து முடிந்த 8வது சீசனில் முத்துக்குமரனும் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.