Paristamil Navigation Paristamil advert login

மலேசியாவிலிருந்து சீனாவுக்கு சென்ற விமானத்தில் சண்டை !

மலேசியாவிலிருந்து சீனாவுக்கு சென்ற விமானத்தில் சண்டை !

24 ஆடி 2025 வியாழன் 15:04 | பார்வைகள் : 525


மலேசியா, கோலாலம்பூரிலிருந்து சீனாவின் செங்டுவுக்குச் சென்ற ஏர் ஏசியா விமானத்தில் மின் விளக்குகள் மங்கலாக ஒளிர்ந்தமையினால் சில பெண்கள் அடங்கிய குழுவினர் கூச்சிலிட்டுக் கத்தியுள்ளனர்.

பெண்கள் கூச்சலிட்டு கத்துவதை நிறுத்துமாறு தெரிவித்ததை அடுத்து நடுவானில் விமானத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை 6.11 மணிக்கு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, இரவு 10.13 மணிக்கு சீனாவின் செங்டு தியான்ஃபு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர்பஸ் A320 என்ற விமானத்தில் இடம்பெற்றுள்ளதாக தி டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டபோது பிரச்சினை ஆரம்பித்துள்ளது.

அதாவது, குறித்த நபர் அவர்களை "முட்டாள்" என அழைத்து "வாயை மூடு" எனக் கூறியதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து வாய்த்தர்க்கம் அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து கைகலப்பாக மாறியதில் பெண் ஒருவர் இருக்கையின் மீது ஏறி முன் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த நபரை தாக்கியுள்ளார்.

பெண்கள் கத்தி கூச்சிலிடுவதை நிறுத்த மறுத்ததால் நான்கு மணி நேர பயணத்தின் நடுவில் சண்டை ஆரம்பித்ததாக சம்பவத்தை காணொளியாக பதிவு செய்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்ணொருவரின் தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இரண்டு பெண்கள் அந்த நபரை தாக்கியதாகவும், நிலைமையை முன்கூட்டியே தணிக்காததற்காக விமான பணிக் குழுவினரைக் குற்றம் சாட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதியில் விமான பணிக் குழுவினர்கள் பயணிகளை அமைதிப்படுத்திய போதிலும், சீன பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்ய விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

சிச்சுவான் மாகாண பொது பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்