Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : Notre-Dame-des-Champs தேவாலயத்தில் தீ!

பரிஸ் : Notre-Dame-des-Champs தேவாலயத்தில் தீ!

24 ஆடி 2025 வியாழன் 09:49 | பார்வைகள் : 2321


 

பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் உள்ள Notre-Dame-des-Champs தேவாலயத்தில் நேற்று ஜூலை 23, புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

19 ஆம் நூற்றாண்டு பழமையான குறித்த தேவாலயத்தின் சிறிய அலுவலக அறைக்குள் நேற்று திடீரென தீ பரவியது. இரண்டு சதுர மீற்றர் அளவு கொண்ட சிறிய அறைக்குள் தீ பரவியதை அடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்துவதற்கு முன்னரே அலுவலகத்துக்குள் இருந்த பல ஆவணங்கள் தீக்கிரையானதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தீயில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தேவாலயம் Boulevard du Montparnasse அருகே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்