தீயணைப்பு படை வீரர் கைது!!

24 ஆடி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 1547
தீயணைப்பு படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏழு இடங்களில் செயற்கையாக தீ வைத்து காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து ஜூலை 12 ஆம் திகதிவரையான நாட்களுக்குள் தீயணைப்பு படை வீரர் ஒருவர் Tours (Indre-et-Loire) நகரில் உள்ள காட்டுப்பகுதிகள், வீதிக்கரைகள் என ஏழு இடங்களில் தீ மூட்டியுள்ளார்.
விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டு குறித்த 25 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். அவரது வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருகிறது.
குறித்த இளம் தீயணைப்பு படை வீரர் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.