பாகிஸ்தானில் பயங்கரம்; இளம் ஜோடி ஆணவக்கொலை

23 ஆடி 2025 புதன் 18:19 | பார்வைகள் : 984
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இளம் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்ட வீடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
பனோ பீபி - அஹ்சான் உல்லா என்ற இளம் ஜோடி, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டர்.
இந்நிலையில் கணவன் - மனைவியை கடத்திச் சென்று குவெட்டா நகரின் புறநகரில் வைத்து நபர் ஒருவர் துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
கடந்த மாதம் மே 2025 இல் தெரிவிக்கப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் பழங்குடியினத் தலைவர் சர்தார் சதக்ஸாய் மற்றும் பெண்ணின் சகோதரன் உட்பட 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண்ணின் சகோதரன் முறையீட்டின் பேரில், பழங்குடியினத் தலைவர் இந்த கொலையை செய்ய உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை மனித உரிமைகள் ஆணையத்தின் தகவல்படி, பாகிஸ்தானில் 2024 இல் குறைந்தது 405 ஆணவக்கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1