மீண்டும் சைபர் தாக்குதலுக்குள்ளான France Travail: 3.4 இலட்சம் வேலை தேடுவோரின் தகவல்கள் கசிய வாய்ப்பு!!!
23 ஆடி 2025 புதன் 14:25 | பார்வைகள் : 2248
France Travail, புதிய சைபர் தாக்குதலுக்குள்ளானதாக இன்று அறிவித்துள்ளது. இதில் 3,40,000 வேலை தேடுவோரின் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
இசேர் l'Isère பகுதியில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தின் கணக்கைத் தாக்கிய "இன்போஸ்டீலர்" (Infostealer) எனும் குற்றவியல் மென்பொருளால் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த மென்பொருள், உள்நுழைவுத் தகவல்களை திருடும் தன்மை கொண்டது.
எந்த தகவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன?
- பெயர் மற்றும் முதல் பெயர்
- பிறந்த தேதி
- France Travail அடையாள எண்
- மின்னஞ்சல் மற்றும் தபால் முகவரிகள்
- தொலைபேசி எண்கள்
வங்கி விவரங்கள் மற்றும் கடவுச்சொற்கள் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த தனிப்பட்ட தகவல்கள் மோசடி முயற்சிக்காக பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, போலியான சேவைகளாக நடித்து மேலும் தகவல்களை திரட்ட முயற்சிக்கலாம்.
France Travail, இந்த தாக்குதலுக்கான முறைப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan