Paristamil Navigation Paristamil advert login

மன்னார் – இராமேஸ்வரம் படகு சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

மன்னார் – இராமேஸ்வரம்  படகு சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

23 ஆடி 2025 புதன் 11:22 | பார்வைகள் : 167


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது மன்னார் இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் அவ் கேள்வியானது  போக்குவரத்து அமைச்சருக்கு விளங்காத காரணத்தினால் அவர்  காங்கேசன் துறையிலிருந்து இந்தியாவுக்கான படகு  சேவை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து அதனை விளக்கிக் கூறிய நான் அவர் வினாவிய விடையம் மன்னார் இராமேஸ்வரம் படகுச் சேவை பற்றியது என்பதோடு. போக்குவரத்து அமைச்சகம் இந்த செயல்முறையை விரைவுபடுத்த முடிந்தால், மன்னார்-ராமேஸ்வரம் படகு சேவையை மீண்டும் தொடங்க நிதிக்கான பங்களிப்பினை பெற நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் என குறிப்பிட்டேன். மன்னார் – இராமேஸ்வரம் இடையே குறைந்தளவான போக்குவரத்து தூரமே உள்ளது. ஆனால் காரைக்கால் – காங்கேசன்துறை இடையிலான படகு சேவைகள் தொடர்பிலேயே அரசாங்கம் கூறுகின்றது. அந்தப் படகு சேவை மிக நீளமானது ஆகும். இது நீண்ட தூரமாகும். வடக்கில் இந்த சேவைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மக்கள் மிகவும் நன்மையடைவர் அத்துடன்  வியாபார நடவடிக்கைகளும் வலுப்பெறும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும்.

இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல் விடயத்தில் இந்தியாவும் இதனை முன்னெடுத்துச் செல்ல தயாராக இருக்கின்றது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்