Paristamil Navigation Paristamil advert login

ஓரணியில் தமிழகத்துக்கு புதிய நடைமுறை: தி.மு.க.,

ஓரணியில் தமிழகத்துக்கு புதிய நடைமுறை: தி.மு.க.,

23 ஆடி 2025 புதன் 10:57 | பார்வைகள் : 182


தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை:

தி.மு.க.,வின் 'ஓரணியில் தமிழகம்' பிரசாரத்தை எப்படியாவது தடுக்க முடியாதா என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தவம் கிடந்தார்.

'ஓ.டி.பி.,' மட்டும் கேட்காமல், வழக்கம் போல் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள, நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையை, எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் பதற்றமே, 'ஓரணியில் தமிழகம்' பிரசாரம், எந்த அளவுக்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

'சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்' என்ற வகையில், 'ஓ.டி.பி.,' பெறுவதை தடுத்து விட்டோம் என, அடிமைகள் கூட்டம் கூப்பாடு போடுகின்றனர். 'ஓ.டி.பி.,'க்கு மாற்றாக, உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய வழிமுறைகளை, தி.மு.க., நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டும்.

அதன் விபரம்:


மக்களுடன் ஸ்டாலின் செயலியை, அனைவரும் 'அப்டேட்' செய்து கொள்ளுங்கள். ஓ.டி.பி., கேட்கும் முறை தற்போது இல்லை. மொபைல் எண் கட்டாயம். தற்போதைக்கு, ஒரு குடும்பத்துக்கு ஒரு போன் நம்பரில், நான்கு பேரை உறுப்பினர்களாக சேர்க்கலாம்.

ஒரு குடும்பத்திற்கு, ஒரு மொபைல் போன் எண் என்ற முறை வந்துள்ளது. மொபல் எண் தவறாகவோ அல்லது அந்த குடும்பத்தில் இல்லாத நபரின் எண்ணாகவோ இருந்தால், உறுப்பினர் சேர்க்கையில் மேற்கொண்ட அனைத்து தரவுகளையும் நீக்க வேண்டும்.

இப்பணியை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து துவங்க வேண்டும் என்பதால், பெறப்படும் மொபைல் எண்ணின் உண்மைத்தன்மையை உறுதிசெய்து கொள்வது அவசியம்.

மொபைல் எண்ணை பதிவிட்டு சமர்ப்பித்தால், உறுப்பினர் சேர்க்கை முடிவடையும். அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து, முழுமையாக கணக்கெடுப்புகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்