பெண்கள் காதல் வயப்பட்டால் வெளிப்படுத்தும் அறிகுறிகள் தெரியுமா..?

22 ஆடி 2025 செவ்வாய் 18:30 | பார்வைகள் : 146
காதல் எப்போதும் பிரமாண்டமான சைகை அல்லது வெளிப்படையான அறிவிப்புகள் மூலம் வெளிவருவதில்லை. உண்மையான காதல் என்பது சிறிய, அன்றாட செயல்களில் வெளிப்படும். அது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது, கவனிப்பது, புரிந்துகொள்வது போன்றவையாகும். எனவே, பெரிய சைகைகளை விட, சிறிய, அன்றாட செயல்களில் வெளிப்படும் உண்மையான அன்பே காதல் என்று அர்த்தம். ஆனால் இந்த பாசத்தை காதலிக்கும் நபர் புரிந்து கொள்ள மாட்டார்கள். பெண்கள் தாங்கள் காதலில் இருப்பதைக் காட்டும் சில அமைதியான முறையில் காட்டும் வழிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நீங்கள் ஒரு முறை காபி ஸ்ட்ராங்காக இருந்தால் தான் பிடிக்கும் என்று ஒரு பெண்ணிடம் கூறியிருப்பீர்கள். சில வாரங்கள் கழித்து அந்த பெண், அதே பதத்தில் காபியை கொண்டு வந்து தருகிறார். அதேபோல் பள்ளியில் படிக்கும்போது உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி அந்த பெண்ணிடம் கூறியிருப்பீர்கள், இந்த பாடல்கள் அனைத்தும் அந்த பெண்ணின் பிளேலிஸ்ட்டில் இருக்கும். நீங்கள் சொல்லும் சிறிய விஷயங்களை கூட அந்த பெண் உன்னிப்பாக கேட்கிறார். இதற்கு காரணம் நீங்கள் அதை திரும்பி கேட்கும்போது பதிலளிப்பதற்க்காக அல்ல, நினைவில் வைத்துக் கொள்வதற்காக தான்.
காதலில் விழுந்த பெண், தான் விரும்பும் காதலனை தன்னுடைய உலகத்திற்குள் அழைத்து செல்கிறார். அதாவது அவருடைய விருப்பமான பாடல்களின் பிளேலிஸ்ட், குழந்தைப் பருவக் கதை, தனது அச்சங்கள், மூடநம்பிக்கைகள், நள்ளிரவு எண்ணங்கள் ஆகியவற்றை தான் காதலனிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறார்.
உங்களை காதலிக்கும் பெண், தூங்கி எழுந்ததும் உங்களுக்கு மெசேஜ் அனுப்புவது அல்லது தூங்குவதற்கு முன் உங்களுக்கு குட்நைட் சொல்வது வழக்கமாக வைத்துக் கொள்கிறார். இது காதலின் வெளிப்பாடாகும். அவர் சின்னச் சின்ன விஷயங்களில் கூட, தன் வழக்கங்களில் உங்களையும் சேர்த்துக் கொள்ள விரும்புவார்.
உங்களை காதலிக்கும் பெண், உங்களுடைய வார்த்தைகளுக்கு மட்டுமல்ல, உங்களுடைய மௌனங்களையும், மறைக்க முயற்சிக்கும் விஷயங்களையும் புரிந்து கொள்கிறார். அதாவது நீங்கள் வருத்தப்படுவதாக கூறுவதற்கு முன்பே நீங்கள் வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்வார்.
ஒரு பெண் உங்களுக்கு நண்பராக மாறும் நிலையில் அவர் தன் உலகத்திற்குள் உங்களுக்கு இடம் தருவார். உங்களை சந்தித்த முதல் தேதியை கூட அவர் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வார். அதாவது அவரது சின்ன சின்ன விஷயங்களில் கூட உங்களுக்கும் இடம் தருவார்.
ஒரு பெண் காதலில் விழுந்ததும், உங்களிடம் அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவார், தனக்கு எது சரி என்று படுகிறதோ அதையே செய்வார், ஆனாலும் அந்த பெண்ணின் உள்ளே ஒரு மென்மையும், புரிதலும் இருக்கும். இருப்பினும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, சண்டையில் வெற்றி பெறுவதற்காக மட்டுமல்ல, உங்களை புரிந்து கொள்ள வைப்பதற்காகவும் தான்.
நீங்கள் காதலிக்கும் பெண் தன் காதலை உலகிற்கு அறிவிக்காமல் இருக்கலாம், ஆனால் "நீ அதைச் செய்வாய் என்று எனக்குத் தெரியும்" அல்லது "அது உனக்குப் பொருத்தமாக இருக்கும்" போன்ற விஷயங்களை அவர் வித்தியாசமாகச் சொல்வார்.
உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால், உங்களை அன்பாக கவனித்து கொள்வார். உங்களை எப்போதும் சந்திக்கும்போது ஒரு பரிசை தருவார். நீங்கள் உணவை சாப்பிடவில்லை என்று தெரிந்தால், அந்த பெண் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்புவார், அல்லது வாங்கி கொண்டு வருவார். இது வெறும் பராமரிப்பு பற்றியது மட்டுமல்ல, உங்கள் மீதுள்ள அன்பைப் பற்றியது.
உங்கள் மீதுள்ள அன்பு அவரை தைரியமாக்குகிறது. அவர் சோர்வாக இருக்கும்போது, குழப்பமாக இருக்கும்போது, ஏற்ற இறக்க மனநிலையில் இருக்கும்போது, உங்களை சந்திக்க வேண்டும் என்று அவர் விரும்புவார்.