Paristamil Navigation Paristamil advert login

ஓர்லி : விமானம் மீது மின்னல் தாக்குதல்!

ஓர்லி : விமானம் மீது மின்னல் தாக்குதல்!

22 ஆடி 2025 செவ்வாய் 15:10 | பார்வைகள் : 657


 

புறப்பட தயாராக இருந்த Airbus A320 விமானம் ஒன்றை மின்னல் தாக்கியது.

ஜூலை 21,  நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. ஓர்லி விமானநிலையத்தில் இருந்து Ajaccio நகர் நோக்கி புறப்பட தயாராக இருந்த XK773 இலக்க விமானம் மீது பிற்பகல் 1.30 மணிக்கு மின்னல் தாக்கியது.

விமானத்தில் நூற்றுக்காணக்கான பயணிகளும், விமானக்குழுவும் இருந்த நிலையில், விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்தை மின்னல் தாக்கியது.

அதிஷ்ட்டவசமாக அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. சில எரிவு வாசம் எழுந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

பின்னர் பயணிகள் இறக்கப்பட்டு, விமானம் சோதனையிடப்பட்டு, ஆபத்துக்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டதன் பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்