Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா பேருந்து விபத்தில் பலர் உயிரிழப்பு

ரஷ்யா பேருந்து விபத்தில் பலர் உயிரிழப்பு

22 ஆடி 2025 செவ்வாய் 13:38 | பார்வைகள் : 951


ரஷ்யாவின் கிழக்கே யகுதியா பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் சென்ற பேருந்து விபத்துக்குளானதில் 13 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், சாலையில் இருந்து விலகி ஓடி 82 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்து சம்பவம் டெனிசோவ்ஸ்கி சுரங்கம் மற்றும் பதப்படுத்தும் ஆலை அமைந்த சாலையில் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகளால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன என விசாரணை அதிகாரிகள் சுட்டி காட்டுகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து காரணமாக , இன்று ஒரு நாள் இரங்கல் கடைப்பிடிக்கப்படும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்