மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ஆரம்பித்துள்ள ரஷ்யா

22 ஆடி 2025 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 248
ரஷ்யாவினால் நேற்று இரவு யுக்ரைன் மீது ஏவப்பட்ட ஏவுகணை தாக்குதல் காரணமாக இருவர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரவு முழுவதும் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், நாட்டின் பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டதுடன், தீப்பரவல் சம்பவங்களும் ஏற்பட்டதாக, யுக்ரைனின் ஜனாதிபதி செலஸ்ன்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், யுக்ரைனின் வான் படைத்தரப்பினரும், ரஷ்யாவிற்கு எதிராக ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தம்மால் ஏவப்பட்ட 24 ஏவுகணைத் தாக்குதல்கள் துல்லியமாக இலக்கை சென்று தாக்கியுள்ளதாக, யுக்ரைன் அறிவிக்கப்பட்டுள்ளது.