அமெரிக்காவில் ட்ரம்ப் கொண்டு வந்த புதிய சட்டம்....!

22 ஆடி 2025 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 714
கிரிப்டோ கரன்சிகள் எனப்படும் டிஜிட்டல் கரன்சிகளின் ஆதிக்கம் உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
இதற்கு காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிப்டோ கரன்சிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டவர்.
கடந்த ஆண்டு கூட அவரே சொந்தமாக ஒரு கிரிப்டோ டோக்கனை வெளியிட்டார்.
எனவே பலரும் நம்பிக்கையுடன் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர்.
அண்மையில் கூட பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 1.20 லட்சம் டாலர் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
இந்நிலையில் தான் அதிபர் கிரிப்டோ நாணயங்களை மக்கள் அன்றாடம் பயன்படுத்த வழிவகை செய்யும் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
Genius சட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டம் அமெரிக்கா பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றது.
ஏற்கனவே செனட் அவையும் இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதால் டிரம்ப் இதனை சட்டமாக்குவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்.
இந்த சட்டத்தின் மூலம் அமெரிக்காவில் நாள்தோறும் எப்படி டாலர்களை பயன்படுத்தி மக்கள் பேமெண்ட்களை செலுத்துகிறார்களோ இனி அதே போல கிரிப்டோ கரன்சிகளையும் கொண்டு பேமெண்ட் செய்ய முடியும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1