காஸாவில் போர் நிறுத்தம்! - 25 நாடுகள் இணைந்து அறிக்கை!!

22 ஆடி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 937
காஸாவில் போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவரும் நோக்கில் 25 நாடுகள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவற்றில் பிரான்சும் உள்ளது.
‘உடனடி’ போர் நிறுத்தத்துக்கு அழைக்கப்பட்டு இந்த கூட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளும் உள்ளன. குறித்த அறிக்கை ஜூலை 21, நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. “நாங்கள் கூட்டாக இணைந்து அவசரமான செய்தியை வெளியிடுகிறோம். காஸாவில் உடனடியான போர் நிறுத்தம் வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸாவில் இரண்டு மில்லியன் பேர் முற்றுகையிடப்பட்டு, ஒரு சிறிய பகுதிக்குள் ஒடுக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 21 மாதங்களாக தொடரும் இந்த தாக்குதலில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக உணவு விநியோகத்தின் போது இடம்பெற்ற தாக்குதலின் போது மட்டும் 875 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.