Paristamil Navigation Paristamil advert login

"பாலஸ்தீனுக்கு விடுதலை" ரோய்சி விமான நிலையத்தில் Air France ஊழியரால் சர்ச்சை!

21 ஆடி 2025 திங்கள் 18:19 | பார்வைகள் : 956


ரோய்சி-சார்ல்ஸ்-து-கோல் விமான நிலையத்தில் (l’aéroport Roissy-Charles de Gaulle), ஏர் பிரான்ஸ் (Air France) சார்பாக பணியாற்றும் ஒரு வெளி பாதுகாப்பு நிறுவன ஊழியர், பயணிகளிடம் "பாலஸ்தீனுக்கு விடுதலை" (Free Palestine) என கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவம் ஜூலை 18-ம் தேதி இந்த ஊழியர், பாதுகாப்பு சோதனையின் பின், ஒரு குழு இளைஞர்களிடம் கடவுச்சீட்டை சரிபார்த்தபோது இந்த வார்த்தைகளை கூறியதாக கூறப்படுகிறது.

ஏர் பிரான்ஸ் மற்றும் Aéroports de Paris குழு (ADP) ஆகியவை இந்த சம்பவம் விமான நிலையத்தில் நடந்ததை இன்று உறுதி செய்துள்ளன. சம்பந்தப்பட்ட ஊழியர், ஏர் பிரான்ஸின் நேரடி ஊழியர் அல்ல என்றும், வெளிச்சார்பு பாதுகாப்பு நிறுவனத்திலிருந்து வந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர். 

ஏர் பிரான்ஸ் தனது மதிப்பீடுகளில் நடுநிலைத்தன்மை, மரியாதை ஆகியவற்றை முக்கியமாகக் கருதுவதாகவும், அனைத்து பணியாளர்களும் “பணிநெறி விதிகளை” கடைபிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்