நிலையத்தில் நிற்காமல் பயணித்த TGV! - 80 பயணிகள் தவிப்பு!!

21 ஆடி 2025 திங்கள் 17:56 | பார்வைகள் : 1134
TGV தொடருந்து ஒன்று நிலையம் ஒன்றில் நிற்காமல் பயணித்துள்ளது. அதை அடுத்து, 80 பயணிகள் தனித்துவிடப்பட்டுள்ளனர்.
ஜூலை 19, சனிக்கிழமை பரிசில் இருந்து புறப்பட்டு Brest நகர் நோக்கி பயணித்த TGV ஒன்று, Lamballe-Armor (Côtes-d'Amor ) எனும் நிலையத்தில் நிற்காமல் பயணித்துள்ளது. குறித்த நிலையத்தில் இறங்கவேண்டியவர்கள் தொடருந்துக்குள் சிக்குண்டதோடு, குறித்த தொடருந்து நிலையத்தில் காத்திருந்தவர்கள் தங்களுக்கான தொடருந்தை தவறவிட்டுவிட்டு தவித்துள்ளனர்.
மொத்தமாக 80 பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடருந்து நிலையத்தில் காத்திருந்தவர்கள் இரண்டுமணிநேரம் கழித்து மற்றுமொரு தொடருந்தில் பயணித்தனர்.
ஆனால், குறித்த நிலையத்தில் இறங்கவேண்டியவர்களின் நிலமை கவலைக்கிடமாகச் சென்று முடிந்தது. அவர்கள் பலமணிநேரம் கழித்தே மீண்டும் குறித்த நகருக்கு திரும்பி வந்தனர்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.