Paristamil Navigation Paristamil advert login

கீவ் பயணமாகியுள்ள பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர்!!

கீவ் பயணமாகியுள்ள பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர்!!

21 ஆடி 2025 திங்கள் 16:56 | பார்வைகள் : 434


பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Noël Barrot , யுக்ரேனின் தலைநகர் கீவுக்கு பயணித்துள்ளார்.

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்த பயணம் அமைந்துள்ளது. ஜூலை 21, இன்று திங்கட்கிழமை முற்பகல் அவர் கீவ் நகரைச் சென்றடைந்தார். அங்கு அவரை யுக்ரேனின் வெளியுறவுத்துறை அமைச்சர்  Andriy Sybiga வரவேற்றார். அவருடன் உரையாடிய அவர், அடுத்தடுத்து இரண்டு சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளார்.

யுக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி மற்றும், பிரதமர் ஜூலியா ஸ்விரிடென்கோ ஆகிய இருவரையும் சந்திக்கின்றார்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து யுக்ரேனை பாதுகாப்பதோடு, ஐரோப்பிய எல்லைகளையும் பாதுகாப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்