டொரொண்டோவில் வீடொன்றில் தீ விபத்து - 70வயது முதியவர் பலி

21 ஆடி 2025 திங்கள் 14:41 | பார்வைகள் : 214
டொரொண்டோ நகரின் கிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 70 வயதுடைய பெண் ஒருவர் கடுமையாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜெராட் ஸ்ட்ரீட் Gerrard Street East மற்றும் கிளென் சைட் Glenside Avenue பகுதியில், நள்ளிரவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கட்டடத்தின் நான்காவது மாடியில் “தீவிர புகை” இருப்பதைக் கண்டதாகவும், ஒருவர் மரணமடைந்த நிலையில் கண்டுபிடித்ததாகவும் உறுதி செய்துள்ளனர்.
அத்துடன், 70 வயதுடைய பெண் ஒருவர் மிக கடுமையான நிலைமையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மற்றும் மூன்றாவது நபர் ஒருவரும் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த தீ பாதுகாப்பு ஆணையர் அலுவலகம் (Office of the Fire Marshal) சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.