பரிஸ் : சிறுவனை மோதி தள்ளிய கழிவு அகற்றும் வாகனம்!!
21 ஆடி 2025 திங்கள் 08:12 | பார்வைகள் : 3052
கழிவு அகற்றும் வாகனம் ஒன்று 3 வயது சிறுவனை மோதி தள்ளியுள்ளது. இதில் சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 20, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு இச்சம்பவம் பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. பாதசாரிகள் கடவை அருகே இயந்திரமற்ற கால்களால் இயக்கக்கூடிய ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த குறித்த சிறுவனை கழிவு அகற்றும் வாகனம் இடித்து தள்ளியுள்ளது.
சிறுவன் திடீரென வீதியை குறுக்கறுத்ததாகவும், வாகனத்தை சடுதியாக நிறுத்த போதிய அவகாசம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் படுகாயமடைந்துள்ள நிலையில், அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலதிக விசாரணைகளுக்காக சாரதி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan