அர்ஷ்தீப் குணமடைய வாய்ப்பில்லை; டெஸ்டில் அறிமுகமாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்
21 ஆடி 2025 திங்கள் 07:46 | பார்வைகள் : 1435
CSK வீரர் அன்ஷுல் காம்போஜ் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் களமிறங்க உள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.
காயமுற்ற வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) குணமடைய வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியானது.
இதன் காரணமாக மான்செஸ்டர் டெஸ்டில் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அன்ஷுல் கம்போஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த இவரை தேசிய தேர்வுக்குழு மாற்று வீரராக சேர்க்க முடிவு செய்துள்ளது. பிசிசிஐ வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.அன்ஷுல் கம்போஜ் (Anshul Kamboj) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் ஆவார்.
இவர் 24 முதல்தர போட்டிகளில் 79 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏயில் 25 போட்டிகளில் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan