Paristamil Navigation Paristamil advert login

தூங்கிக்கொண்டிருந்த கணவரை பெற்றோல் ஊற்றி எரித்த மனைவி!

தூங்கிக்கொண்டிருந்த கணவரை பெற்றோல் ஊற்றி எரித்த மனைவி!

20 ஆடி 2025 ஞாயிறு 19:53 | பார்வைகள் : 822


தூங்கிக்கொண்டிருந்த கணவரை பெற்றோல் ஊற்றி எரியூட்டிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Toulouse  நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று ஜூலை 20 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்,. Juncasse-Argoulets  நகர்ப்பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து அதிகாலை 3 மணிக்கு அழைப்பு கிடைத்ததை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 38 வயதுடைய ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அவர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், அவர் மீது பெற்றோலை ஊற்றி எரியூட்டியுள்ளார் அவரது மனைவி.

கணவன் - மனைவிக்கிடையே விவாகரத்துக்கான நடைமுறை இடம்பெற்று வருவதாகவும், கணவர் தடையை மீறி வீட்டுக்கு வருகை தந்ததாகவும், அதை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்