Paristamil Navigation Paristamil advert login

மர்ன் நதியில் துயர சம்பவம்: நீந்தத் தெரியாத இளைஞன் பலி!!

மர்ன் நதியில் துயர சம்பவம்: நீந்தத் தெரியாத இளைஞன் பலி!!

20 ஆடி 2025 ஞாயிறு 16:53 | பார்வைகள் : 535


Meaux நகரில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு இளைஞன் மர்ன் நதியில் (la Marne) மூழ்கி உயிரிழந்துள்ளார். நீந்தத் தெரியாத இளைஞர், தனது நண்பருடன் நதிக்குள் குதித்துள்ளார். 

நண்பர் ஒருவர் கரையை எட்டியபோதிலும், அவர் நீரின் பெருக்கில் சிக்கி உயிரிழந்துள்ளார். தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டாலும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. இரவு சுமார் 9:50 மணியளவில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் செயின்-எ-மார்ன் (Seine-et-Marne) பகுதியில் கோடை காலங்களில் தொடரும் நீச்சல் விபத்துகளில் ஒன்றாகும். மேயர் ஜான்-பிரான்சுவா கோப்பே (Jean-François Copé) கண்காணிப்புக்கு உட்பட்ட நீந்தும் பகுதிகளை தவிர்த்து நீந்துவது ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். 

அவர் மக்களை நகராட்சி விதிகளை கடைபிடிக்கவும், பாதுகாப்பாக நடக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். "நதி எவ்வளவு அமைதியாக இருந்தாலும், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும்" எனவும்  தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்