Paristamil Navigation Paristamil advert login

உயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்றம் குறித்து இரு கைதிகள் எதிர்ப்பு!!

உயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்றம் குறித்து  இரு கைதிகள் எதிர்ப்பு!!

20 ஆடி 2025 ஞாயிறு 14:51 | பார்வைகள் : 395


Vendin-le-Vieil எனும் சிறை, நாட்டில் மிகவும் ஆபத்தான 200 போதைமருந்து கடத்தல் குற்றவாளிகளை தனிமைப்படுத்தி வைக்க அரசாங்கம் மார்ச் 6-ம் தேதி தேர்ந்தெடுத்த இரண்டு உயர் பாதுகாப்பு சிறைகளில் ஒன்றாகும்.

போதைமருந்து கடத்தல் வழக்கில் தொடர்புடைய Guy B. எனப்படும் "Mareko Scarla", ஜூலை இறுதியில் உயர் பாதுகாப்பு சிறை ஒன்றான Vendin-le-Vieil-க்கு மாற்றப்பட உள்ளார். ஆனால் அவரும் மற்றும் மற்றொரு கைதியும், இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Guy B. தற்போது Beauvais சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; அவரின் வழக்கறிஞர், "Hygiaphone" எனப்படும் கண்ணாடி வழியே சந்திப்பு நடத்த வேண்டியிருப்பதை அவர் கடுமையாக எதிர்க்கிறார் என்றும், அவர் எந்த குற்றத்திற்கும் நிரந்தரமாக தண்டிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Guy B. மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன, குறிப்பாக சிறுவர்களை கடத்தி, அவர்களிடம் சித்திரவதை செய்ததற்காக 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு விசாரணை செப்டம்பரில் Nice நகரில் நடைபெற உள்ளது. மேலும், 2022-ல் நடைபெற்ற ஒரு கொலைக்குத் திட்டமிட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறார். 

அவர் Yoda கும்பலின் உறுப்பினராக இருக்கின்றார், இந்த கும்பல், Marseille நகரில் உள்ள DZ Mafia என்ற மற்றொரு கும்பலுடன் நடத்தும் இரத்தப் போரில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்