Paristamil Navigation Paristamil advert login

செம்மணி விடயம் தேவையற்றது என கூறும் கம்மன்பில

செம்மணி விடயம் தேவையற்றது என கூறும் கம்மன்பில

20 ஆடி 2025 ஞாயிறு 10:12 | பார்வைகள் : 205


செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்ற விடயம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே, அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோண்டினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும் என உதய கம்மன்பில கூறியுள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பலர் மண்ணுக்குள்தான் புதைக்கப்பட்டார்கள்.

எனவே, அந்தப் புதைகுழிகள் யுத்தத்தின் பின்னர் வெளிக்கிளம்பும் போது பலரும் வெவ்வேறு விதமாகக் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

செம்மணியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில், பெருமளவு நிதியை வீண் விரயம் செய்து, அரசு அகழ்வு பணியை மேற்கொண்டுள்ளதாகவும், அது தேவையற்ற விடயம் எனவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், செம்மணி மனிதப் புதைகுழியைத் தோண்டுவது, மீண்டும் இன வன்முறைக்கே வழிவகுக்கும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில அச்சம் வெளியிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்