Paristamil Navigation Paristamil advert login

மாருதி சுசுகி e-Vitara: செப்டம்பர்-3 இந்தியாவில் அறிமுகம்!

மாருதி சுசுகி e-Vitara: செப்டம்பர்-3 இந்தியாவில் அறிமுகம்!

20 ஆடி 2025 ஞாயிறு 10:12 | பார்வைகள் : 139


மாருதி சுசுகி, இந்தியாவின் மிகப்பாரிய கார் நிறுவனமாக, தனது முதலாவது மின்சார எஸ்யூவி மொடலான e-Vitaraவை 2025 செப்டம்பர் 3-ஆம் திகதி இந்தியாவில் வெளியிடவுள்ளது.

இது மாருதியின் மின்சார வாகன யுகத்தில் முதற்கட்டமாகக் கருதப்படுகிறது.

‘High-Tech & Adventure’ வடிவமைப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மொடல், Y-வடிவத்திலான LED DRL மற்றும் விரிவான டெயில் லேம்புகளுடன் ஸ்டைலிஷ் லுக்கை வழங்குகிறது.

18 இன்ச் எரோடைனமிக் அலாய் வீல்கள், மறைந்த ரியர் டோர் ஹேண்டில்கள் ஆகியவை இதன் ஸ்போர்டி தோற்றத்தை மேலும் உயர்த்துகின்றன.

மொத்தம் 10 நிறங்களில் வரும் e-Vitara, அதில் 6 mono-tone மற்றும் 4 dual-tone விருப்பங்களை வழங்குகிறது.

மோனோ டோன்: Nexa Blue, Grandeur Grey, Splendid Silver, Arctic White, Opulent Red, Bluish Black

டூயல் டோன்: Arctic White, Opulent Red, Splendid Silver, Land Breeze Green with a Bluish Black roof

e-Vitaraவின் கேபின் 10.25-inch touchscreen infotainment system, 10.1-inch digital instrument cluster, முன்புற ventilated சீட்கள், 10-way electrically adjustable driver’s seat போன்ற வசதிகளுடன் நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், Level 2 ADAS (Advanced Driver Assistance System) தொழில்நுட்பத்துடன் மாருதியின் முதலாவது மொடல் இதுவாகும்.

 

Toyota-வுடன் இணைந்து உருவாக்கப்பட்ட Heartect-e பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள e-Vitara, LFP பேட்டரிகளை பயன்படுத்துகிறது.

 

2 பேட்டரி விருப்பங்கள்:

49 kWh (2WD): 142 bhp, 189 Nm

 

61 kWh:

 

2WD: 172 bhp, 189 Nm

 

AWD (dual motor): 181 bhp, 300 Nm

 

இவை நகரப் பயணங்களுக்கும் நீண்ட பயணங்களுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்