23 வயது காதலியை மணந்த 18 வயது பிரபல கால்பந்து வீரர்- திகைப்பில் ரசிகர்கள்

20 ஆடி 2025 ஞாயிறு 09:12 | பார்வைகள் : 121
பிரேசில் கால்பந்து வீரர் என்ட்ரிக் தனது காதலியை கரம்பிடித்தார்.
பிரபல கிளப் கால்பந்து அணியான ரியல் மாட்ரிட்டில் விளையாடி வரும் பிரேசில் வீரர் என்ரிக் (Endrick).
இவர் 23 வயதான மொடல் கேப்ரியலி மிராண்டா என்ற பெண்ணை காதலித்து வந்தார். Palmeirasயில் இவர்கள் இருவரும் ஒன்றாக காணப்பட்டனர்.
இந்த ஜோடி 2023ஆம் ஆண்டில் டேட்டிங் செய்யத் தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டே இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இன்று வரை அவர்கள் எந்த விழாவும் நடத்தவில்லை. இதனால் இது அதிகாரப்பூர்வ திருமணமா என்ற குழப்பம் நீடித்தது.
இந்த நிலையில் என்ட்ரிக், மிராண்டா ஜோடி திருமண மோதிரங்களை அணிந்திருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.