சோதனையைத் தவிர்க்க முயன்ற காருக்கு காவல் துறையினர் துப்பாக்கி சூடு!!

19 ஆடி 2025 சனி 22:55 | பார்வைகள் : 630
அர்கெயில் பகுதியில் (les rues d’Arcueil-Val-de-Marne) ஒரு வாகன ஓட்டுநர் காவல் துறையினர் சோதனையை ஏற்க மறுத்ததால், காவல் துறையினர் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அந்த வாகனம் எதிர்திசையில் பயணித்தது மட்டுமல்லாமல் ஓட்டுநர் காவல் துறையினர் ஒருவரை நோக்கி வாகனத்தை ஓட்டினார். இதனால், "கொலை முயற்சி" மற்றும் "சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தல்" குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பரிஸ் காவல் துறையினர் பிரெஸ்னஸ் (Fresnes) சிறையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்வழியில் வந்த காரை சோதிக்க முயன்றனர். வாகனம் முதலில் நிற்பதுபோல் நடித்தது. ஆனால் காவல் துறையினர் நெருங்கியதும், ஓட்டுநர் திடீரென ஒருவர் மீது வாகனத்தை ஓட்டியுள்ளார்.
காவல் துறை அதிகாரி தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார். ஓட்டுநரும், பயணியுமாக இருந்த நபர்கள் தற்போது காவல்துறையால் தேடப்பட்டு வருகின்றனர்.