Paristamil Navigation Paristamil advert login

நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் பிரான்சில் சிறை!!

நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் பிரான்சில் சிறை!!

19 ஆடி 2025 சனி 19:53 | பார்வைகள் : 1257


நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என (OQTF) பணிக்கப்பட்டவர்கள் பிரான்சில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், நாட்டை விட்டு வெளியேற்றும் முன்னர் அவர்கள் பிரான்சில் சிறைவைக்கப்படவேண்டும் என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு குற்றவாளிகளை அவர்களது சொந்த நாட்டிலேயே சிறைவைப்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக பிரெஞ்சு மக்களில் கருத்துக்களை அறியும் முகமாக CSA  நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருந்தது. அதில் 84% சதவீதமானவர்கள் பிரான்சில் சிறைவைக்கவேண்டும் எனவும், 15% சதவீதமானவர்கள் குற்றவாளிகளது சொந்த நாட்டில் சிறைவைக்க வேண்டும் எனவும், 1% சதவீதமானவர்கள் கருத்துக்கள் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பு CNEWS, JDD, Europe 1 போன்ற ஊடகங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் பங்கேற்றிருந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்