வவுனியாவில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இதுவரையில் 07 பேர் கைது

19 ஆடி 2025 சனி 18:27 | பார்வைகள் : 198
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 11 ஆம் திகதி இரவு, வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியில் விழுந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்திற்கு அப்பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே காரணம் எனக் கூறி, ஒரு குழு குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியது.
இச்சம்பவத்தில் அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை, மக்களை ஒன்றுகூட்டியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தமை மற்றும் இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்த திங்கட்கிழமை இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.