யாழ். நல்லூர் ஆலயத்திற்கு சென்ற பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

16 ஆவணி 2025 சனி 16:08 | பார்வைகள் : 564
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு சென்றவர்களின் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டது.
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பேருந்தை நிறுத்தி விட்டு, நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது சாரதி பேருந்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையிலேயே பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது.
யாழ் . மாநகர சபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர்.
தீயணைப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் , பேருந்தினுள் தீ பெருமளவுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது.