இலங்கை தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்

16 ஆவணி 2025 சனி 14:08 | பார்வைகள் : 143
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் எந்த மாற்றமும் இல்லையென கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரத்தின் படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 270,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 249,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,225 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.