Paristamil Navigation Paristamil advert login

பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!

பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!

16 ஆவணி 2025 சனி 07:03 | பார்வைகள் : 102


ஜிஎஸ்டி குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்பு மகிழ்ச்சி. ஜிஎஸ்டி வரி என்கிற அந்த முறையே கைவிடப்பட வேண்டும்'' என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: தூய்மை பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நகராட்சிகள், மாநகராட்சிகள், பேருராட்சிகள் மற்றும் ஊரக அமைப்புகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். அவர்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று விடுதலை சிறுத்தைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

கைது நடவடிக்கைகள்


தூய்மை பணியாளர்களை குண்டு கட்டாக கைது செய்ததற்கு ஏற்கனவே கண்டித்து இருக்கிறோம். அதேபோல், வலுக்கட்டாயமாக கைது செய்து இருக்க தேவையில்லை. இந்த கைது நடவடிக்கைகள் மட்டுமின்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதை கண்டித்து இருக்கிறோம். அந்த வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதற்கு அரசாணை போட்டது அதிமுக தான்.

அணுகுமுறை


தூய்மை பணியாளர்களின் பிரச்னைக்காக விசிக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இன்றைக்கு போராட கூடியவர்கள் யாரும் அதிமுக தனியார்மயம் ஆக்கும் போது வாய் திறக்கவில்லை. இது நான் திமுகவுக்காக சொல்லவில்லை. ஏன் இந்த அரசியல். திமுக செய்தால் எதிர்க்க வேண்டும். அதிமுக செய்தால் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பது தான், இங்கு அணுகுமுறையாக இருக்கிறது.

திமுக கூட்டணியில் இருந்தாலும் கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கிறோம். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். இதுவே தீபாவளி பரிசாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். மகிழ்ச்சி. எங்களை பொறுத்தவரை ஜிஎஸ்டி வரி என்கிற அந்த முறையே கைவிடப்பட வேண்டும்.

பழைய முறையே நடைமுறையில் இருக்க வேண்டும். நல்ல அறிவிப்புகள் வருமானால் அதை வரவேற்கவும், பாராட்டவும் கடமைப்பட்டு இருக்கிறோம். தேர்தலுக்காக செய்தாலும் அது மக்களுக்கு பயன் தரும் என்றால் அதை வரவேற்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்