இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்- பலர் கைது

15 ஆவணி 2025 வெள்ளி 19:57 | பார்வைகள் : 194
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் முடிவுக்கு வராத நிலையில் இஸ்ரே அரசாங்கத்தை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
காசா போரை நிறுத்தி ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்டு வருமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல் அவிவ் நகரில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் விதமாக சாலையின் குறுக்கே டயர்களை அடுக்கி அவர்கள் தீ வைத்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈருபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஹமாஸ் வசமுள்ள 50 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிரோடிருக்கக்கூடும் என இஸ்ரேல் அதிகாரிகள் நம்புகின்றனர்.