குவைத்தில் விஷ சாராயம் குடித்து - 13 பேர் பலி

15 ஆவணி 2025 வெள்ளி 08:27 | பார்வைகள் : 231
குவைத்தில் விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றார்கள்.
இந்நிலையில் அங்கு விஷ சாராயம் குடித்த 63 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 63 பேரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 13 பேர் பலியானார்கள். மற்ற அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை இடம்பெறுவதாக தகவல்கள் கூறுகின்றன.