Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் ஆழிப்பேரலை அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அமெரிக்காவில் ஆழிப்பேரலை அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

15 ஆவணி 2025 வெள்ளி 07:14 | பார்வைகள் : 234


அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய பாரிய நிலநடுக்கம் 1,000 அடி உயர ஆழிப்பேரலையை (மெகா-சுனாமி) ஏற்படலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 

விர்ஜினியா டெக் பல்கலைக்கழக ஆய்வு, அடுத்த 50 ஆண்டுகளில் 8.0 மெக்னிடியூட் அல்லது அதற்கு மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட 15% வாய்ப்பு உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

இந்த நிலநடுக்கம் கடற்கரை பகுதிகளை 6.5 அடி வரை திடீரென தாழ்த்தி, வெள்ளப் பரப்பை விரிவாக்கி, சியாட்டில், போர்ட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களை நிமிடங்களில் மூழ்கடிக்கக் கூடிய பேரலைகளை உருவாக்கலாம்.

 

 

இது 30,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும், 170,000-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளுக்கு சேதத்தையும், 81 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தலாம் என ஆய்வு எச்சரிக்கிறது.

 

வொஷிங்டன், வடக்கு ஒரேகான், வடக்கு கலிபோர்னியா ஆகியவை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக உள்ளன. அலாஸ்கா மற்றும் ஹவாய் ஆகியவையும் நிலநடுக்க மற்றும் எரிமலை அபாயங்கள் காரணமாக ஆபத்தில் உள்ளன.

 

ஆய்வு, ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள், வலுவான கட்டமைப்புகள், மற்றும் அவசர தயார்நிலை பயிற்சிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்