Paristamil Navigation Paristamil advert login

மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய பாலஸ்தீன குடியேற்றத் திட்டம்...

மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய பாலஸ்தீன குடியேற்றத் திட்டம்...

14 ஆவணி 2025 வியாழன் 18:08 | பார்வைகள் : 193


மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய குடியேற்றத் திட்டத்தின் கீழ் 3,000க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாக இஸ்ரேலிய தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறியுள்ளார்.

 

இஸ்ரேல் நிதியமைச்சரின் இந்த முடிவானது பாலஸ்தீன தேசம் உருவாகும் திட்டத்தை மொத்தமாக தடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கடுமையான எதிர்ப்பின் காரணமாக ஜெருசலேம் மற்றும் மாலே அடுமிம் குடியேற்றத்திற்கு இடையிலான E1 திட்டம் பல தசாப்தங்களாக முடக்கப்பட்டு வந்துள்ளது.

 

சர்வதேச சட்டத்தின் கீழ் குடியேற்றுவது சட்டவிரோதமாகக் கருதப்படும் நிலையில், இருப்பினும் இஸ்ரேல் இதை மறுத்து வருகிறது. இப்படியான நடவடிக்கைகள் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் ஒன்றாகவே மாறியுள்ளது.

 

 

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் சுமார் 160 குடியிருப்பு வளாகங்களில் சுமார் 700,000 இஸ்ரேலியர்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில், பல தசாப்த கால சர்வதேச அழுத்தம் மற்றும் முடக்கங்களுக்குப் பிறகு, நாங்கள் மரபுகளை மீறி மாலே அடுமிமை ஜெருசலேமுடன் இணைக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார் ஸ்மோட்ரிச்.

 

மேலும், இதுதான் சியோனிசத்தின் சிறந்த வடிவம் என தெரிவித்துள்ள அவர், இஸ்ரேல் தேசத்தில் நமது இறையாண்மையைக் கட்டியெழுப்புதல், குடியேற்றுதல் மற்றும் பலப்படுத்துதல் ஆகிய தொடரும் என்றும் பதிவு செய்துள்ளார்.

 

சமீப நாட்களில், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் எண்ணம் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலேயே அமைச்சர் ஸ்மோட்ரிச் இந்த முடிவை எடுத்துள்ளார்.

 

இதனிடையே, மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் இஸ்ரேல் துல்லியமாக பயன்படுத்தி வருவதாக அமைப்பு ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது.

 

மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைப்பதால், பாலஸ்தீன தேசம் உருவாகும் முன்னெடுப்புகளை முடக்க முடியும் என்றே இஸ்ரேல் நம்புகிறது. E1 பகுதியில் 3,401 வீடுகளின் கட்டுமானம் 20 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது.

2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதிலிருந்து, மேற்குக் கரை பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் அழுத்தம் கடுமையாக அதிகரித்துள்ளது, இது சட்டபூர்வமான பாதுகாப்பு நடவடிக்கைகளாக நியாயப்படுத்தப்படுகிறது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்