புட்டின் யுத்த நிறுத்தத்திற்கு இணங்காவிட்டால் கடும் விளைவுகள் - டிரம்ப் எச்சரிக்கை

14 ஆவணி 2025 வியாழன் 15:37 | பார்வைகள் : 214
அலாஸ்காவில் 15.08.2025 இடம்பெறவுள்ள சந்திப்பின்போது ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் தொடர்பில் யுத்த நிறுத்தத்திற்கு உடன்படாவிட்டால் ரஸ்யா மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி உட்பட ஐரோப்பிய தலைவர்களுடனான நிகர்நிலை சந்திப்பின்போது டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் ரஸ்யாவிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படு;ம் என்பதை தெரிவிக்க மறுத்துள்ளார்.
புட்டினுடனான சந்திப்பு சிறப்பாக இடம்பெற்றால் புட்டின் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் தானும் இணையும் சந்திப்பொன்றிற்கான யோசனையை முன்வைக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புட்டினுடனான சந்திப்பில் எங்களிற்கு கிடைத்திருக்கவேண்டிய பதில்கள் கிடைக்கவில்லை என நாங்கள் கருதினால் நாங்கள் மீண்டுமொரு சந்திப்பிற்கு செல்லமாட்டோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.