Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் இந்து மத வழிபாட்டு தலம் மீது தாக்குதல்

அமெரிக்காவில் இந்து மத வழிபாட்டு தலம் மீது தாக்குதல்

13 ஆவணி 2025 புதன் 17:19 | பார்வைகள் : 3381


அமெரிக்காவில் இந்து மத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் இந்தியானா மாகாணம் கிரீன்வுட் நகரில் இந்து மத வழிபாட்டு தலமான சுவாமி நாராயண் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், சுவாமி நாராயண் கோவில் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

கோவில் சுவரில் கருப்பு மையால் அவதூறு கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.

 

இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

காலீஸ்தான் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்