Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா - இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறை...! ஐநா கடும் எச்சரிக்கை!

ரஷ்யா - இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறை...! ஐநா கடும் எச்சரிக்கை!

13 ஆவணி 2025 புதன் 14:35 | பார்வைகள் : 262


ரஷ்யா மற்றும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது குறித்து ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் எச்சரித்துள்ளார்.

மோதல்களில் நடைபெறும் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தரப்பினர் பட்டியலில் ரஷ்யாய- இஸ்ரேலிய படையினரும் சேர்க்கப்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஐக்கியநாடுகளால் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள சிலவகையான பாலியல் வன்முறைகளின் வடிவங்கள் குறித்த குறிப்பிடத்தக்க கவலையின் விளைவு இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களின் போது இடம்பெறும் பாலியல்வன்முறைகள் குறித்த ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கான தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் ,

பாலியல் வன்முறை மற்றும் ஏனைய பாலியலன்வன்முறை வடிவங்களில் ஈடுபடுவதாக நம்பகதன்மை மிக்க விதத்தில் சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது அவற்றில் ஈடுபடுபவர்கள் குறித்த அடுத்த வருட அறிக்கையில் ரஷ்யா , இஸ்ரேலிய படையினரும் இணைத்துக்கொள்ளப்படலாம் என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையால் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பிறப்புறுப்பு வன்முறை , நீடித்த கட்டாய நிர்வாணம் மற்றும் துஷ்பிரயோகம் மற்றும் இழிவான முறையில் நடத்தப்படும் தொடர்ச்சியான ஆடைகளை அவிழ்க்கும் தேடல்கள் போன்ற பாலியல் வன்முறையின் வடிவங்களைக் குறிக்கின்றன என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

அனுமதிக்க மறுத்துள்ளதால் இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தும் முறைகள் போக்குகள் மற்றும் மற்றும் திட்டமிடப்பட்ட பாலியல்வன்முறைகள் குறித்து உறுதியாக உறுதிப்படுத்தமுடியாமலுள்ளது என தெரிவித்துள்ள அவர், அனைத்து வகையான பாலியல் வன்முறைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலிய அரசாங்கம் எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்