Paristamil Navigation Paristamil advert login

வடகிழக்கு முழுவதும் ஹர்த்தால் போராட்ட திகதி மாற்றம்!

வடகிழக்கு முழுவதும் ஹர்த்தால் போராட்ட திகதி மாற்றம்!

13 ஆவணி 2025 புதன் 09:46 | பார்வைகள் : 6507


வடகிழக்கு முழுவதும் ஹர்த்தால் அனுட்டிப்புக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மடுமாதா தேவாலயத்தில் அன்றைய தினம் விசேட நிகழ்வு நடக்க இருப்பதால் அந்தத் திகதியை வேறொரு திகதிக்கு மாற்றுமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் அடிகளார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நேற்று மன்னார் மறை மாவட்டக் குரு முதல்வருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பின்னர் இந்தத் திகதியை மாற்றுவதென்று முடிவு செய்யப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

இந்த மாற்றம் சம்பந்தமாக நல்லூர் கோவில் திருவிழா நிகழ்வுகளையும் அனுசரித்து எதிர்வரும் திங்கள் கிழமை 18ஆம் திகதிக்கு ஹர்த்தால் அனுட்டிப்பை மாற்றுவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு வடகிழக்கு முழுவதையும் முடக்கி எமது எதிர்ப்பை பாரிய அளவில் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தமிழரசுக் கட்சி விசேட அறிவிப்பை வெளியிட்டு கூறியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்