Paristamil Navigation Paristamil advert login

கூட்டணியில் யாரும் அடிமையில்லை: இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

கூட்டணியில் யாரும் அடிமையில்லை: இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

13 ஆவணி 2025 புதன் 10:26 | பார்வைகள் : 199


யாரும் , யாருக்கும் அடிமையில்லை என இபிஎஸ்க்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், '' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேசலாமா

சென்னையில் மார்க்சிஸ்ட் சார்பில் நடந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சமீப காலமாக இபிஎஸ்க்கு, கம்யூனிஸ்ட்கள் மேல் பாசம் பொத்துக் கொண்டு வருகிறது. நாட்டில் யார் யார் எதைப் பற்றி பேசுவது என்பது இல்லை. கண்டதெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர். அடிமைத்தனத்தை பற்றி இபிஎஸ் பேசலாமா? அவருக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம், இங்கு யாரும் யாருக்கும் அடிமையில்லை.

சந்தேகம்


இபிஎஸ் செய்தித்தாள் படிக்கிறாரா என அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையை படிக்கும் பழக்கம் இருக்காது. படித்து இருந்தால் இப்படி பேச மாட்டார். அக்கட்சி தலைவர்கள் டிவி விவாதங்களில் பேசுவதை பார்க்கிறேன். அக்கட்சியினர் சுட்டிக்காட்டுவதில் உடன்பாடானது எது என்பதை பார்த்து நடவடிக்கை எடுக்கிறேன். கூட்டணி இருக்கிறது என்பதற்காக அவர்கள் சுட்டிக்காட்டாமல் இருந்தது இல்லை. சுட்டிக்காட்டுவதினால் நான் புறக்கணித்ததும் இல்லை.

எங்களின் பாதி கம்யூனிஸ்ட். எனது பெயரே ஸ்டாலின் தான். நட்பு சுட்டல் எது? உள்நோக்கத்துடன் பரப்பப்படும் அவதூறு எது? என்பதை பிரித்து பார்க்க தெரியும். கொள்கை தெளிவும், நட்பின் புரிதலும் கொண்டவர்கள் நாங்கள்.

ஒற்றுமை


ஏகாதிபத்திய சதி என்பது போர் தொடுப்பது மட்டும் அல்ல. இந்தியாவுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தது இதே சதிதான். இதனை பாஜ அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். பிரதமர் மோடி வெளிப்படையான பதிலளிக்க வேண்டும். 5வது சுற்று வர்த்தக பேச்சு முடிந்து 6வது சுற்று பேச்சு நடக்க உள்ள நிலையில், எதற்காக டிரம்ப் தன்னிச்சையாக வரியை உயர்த்த வேண்டும்.

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார். இது குறித்து பார்லிமென்டில் கேள்வி கேட்டால் பிரதமர் பதில் சொல்லவில்லை. இது பலவீனத்தின் அடையாளம். ஏகாதிபத்திய சதியை முறியடிக்க இதேபோன்ற ஒற்றுமையுடன் நாம் இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்