கவனம் ஈர்க்கும் யோகி பாபு பட போஸ்டர்!
12 ஆவணி 2025 செவ்வாய் 16:17 | பார்வைகள் : 2448
அண்மை காலமாக தமிழில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு அனைத்துப் படங்களிலும் அவர் இருக்கிறார். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் கதையின் நாயகனாகவும் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்தன.
ஆனாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நகைச்சுவை வேடத்தில் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் யோகி பாபு பெயர் இருந்தால் படம் விற்பனை ஆகும் என்ற ஒரு பெயரை உருவாக்கி வைத்துள்ளார். ஆனால் அவரின் நகைச்சுவைகள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருப்பதாகவும் அவர் ‘க்ளிஷே’ ஆகிவிட்டார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் அவர் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். அப்படி அவர் நடிப்பில் ‘சன்னிதானம் P.O’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தை அமுதபாரதி இயக்க, மதுராவ், விவேகானந்தன் மற்றும் சபீர் பதான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்




Ajouter
Annuaire
Scan