Paristamil Navigation Paristamil advert login

முதல்வர் ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்; அன்புமணி கேள்வி

முதல்வர் ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்; அன்புமணி கேள்வி

12 ஆவணி 2025 செவ்வாய் 17:53 | பார்வைகள் : 172


முருகன் வரலாறு என்ற பெயரில் ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது. அவர் எப்போது முருகராக மாறினார் என்ற வினா எழுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? பழநி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.

முருகன் வரலாறு என்ற பெயரில் ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது அவர் (ஸ்டாலின்) எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் ஆண்டவர்களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது.

இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்