தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் இத்தனை பயன்களா...?

12 ஆடி 2021 திங்கள் 06:48 | பார்வைகள் : 11693
தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது.
தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
தேங்காயில் இருக்கும் நீர்ச்சத்து உங்கள் உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்கிறது, அதைத் தவிர்த்து சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை குறைகிறது. காக்காய் வலிப்பு உள்ளவர்கள் அதன் வலிப்பு தன்மையைக் குறைப்பதற்கு தேங்காய் பயன்படுகிறது.
தேங்காயில் கிட்டத்தட்ட 61 சதவீதம் வரை நார் சத்து இருக்கிறது. மேலும் இது செரிமானத்திற்கு தேவையான என்சைமனை அதிகரித்து உங்கள் உணவுகள் எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது.
இன்று பலரும் பிரச்சினையாக பார்ப்பது இளமையில் நரைப்பது, முடி உதிர்வது, முடியின் அடர்த்தி குறைவது போன்றவைகள்தான். இதனால் அவர்களின் மனநிலையை தவிர்த்து உடல் நிலை சோர்வடையும். இதனை போக்க தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சக்தி உங்கள் கூந்தலின் அழகை அதிகரிக்க உதவும்.
தேங்காயை சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். சிறுநீரகத் தொற்று உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காயை உண்ண வேண்டும். இதனால் தொற்றுகளால் ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1