Paristamil Navigation Paristamil advert login

காஸாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேல் - அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை

காஸாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேல் - அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை

11 ஆவணி 2025 திங்கள் 05:12 | பார்வைகள் : 252


காஸா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பலஸ்தீனர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

 

காஸாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிந்த முடிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

 

இதற்கு பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

 

 

சீனா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரிவிககப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட அறிக்கையில் “இஸ்ரேல் அரசாங்கம் காஸா நகரத்தைக் முழுமையாக கைப்பற்றும் முடிவால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.

 

இந்த முடிவு ஆபத்தான ஆக்கிரமிப்பு ஆகும். ஏற்கனவே பேரழிவில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான பலஸ்தீனர்களின் வாழ்வை இது மேலும் ஆபத்தில் ஆழ்த்தும்.

 

மீதமுள்ள பணயக்கைதிகள் உட்பட மேலும் பல உயிர்களுக்கு இது ஆபத்தை விளைவிக்கும்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்