Paristamil Navigation Paristamil advert login

வெப்பம் : 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

வெப்பம் : 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

10 ஆவணி 2025 ஞாயிறு 19:25 | பார்வைகள் : 1584


கடுமையான வெப்பம் காரணமாக நாளை ஓகஸ்ட் 11 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டின் 12 மாவட்டங்களுக்கு அதிகூடிய எச்சரிக்கையான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகபட்சமாக 40°C வரையான வெப்பம் பதிவான நிலையில் நாளை வெப்பம் உச்சம் தொடுகிறது. நாட்டின் தெற்கு பிராந்தியம் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவும் எனவும், 39 தொடக்கம் அதிகபட்சமாக 42°C வரையான வெப்பம் நிலவும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

வெப்பத்தை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. அதிக தண்ணீர் அருந்துமாறும், குளிரூட்டப்பட்ட பொது இடங்களில் நேரத்தை செலவிடுமாறும், உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை :

Aude, Charente, Charente-Maritime, Dordogne, Haute-Garonne, Gers, Gironde, Landes, Lot, Lot-et-Garonne, Tarn, Tarn-et-Garonne

41 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை :

Ain, Allier, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Ariège, Aveyron, Bouches-du-Rhône, Cantal, Cher, Corrèze, Haute-Corse, Côte-d'Or, Creuse, Doubs, Drôme, Gard, Hérault, Indre, Indre-et-Loire, Isère, Jura, Loire, Haute-Loire, Lozère, Nièvre, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Rhône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Deux-Sèvres, Var, Vaucluse, Vendée, Vienne, Haute-Vienne.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்